சினிமா உலகில் அதிக அழகும் கொஞ்சம் திறமை இருந்தாலே போதும் நடிகைகள் நீண்டதூரம் பயணிக்க முடியும். ஆனால் அதிக அழகும் அதிக திறமையும் வைத்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்த பிறகு அவர் தொட்ட எல்லாத்திலயும் வெற்றிக் கண்டுதான் இருக்கிறாராம்.
தமிழில் இவர் எடுத்த உடனேயே டாப் நடிகரான சரத்குமாருடன் கைகோர்த்து ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்த காரணத்தினால் அடுத்தடுத்து நடிகரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதனால் அவரது மார்க்கெட் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதால் தென்னிந்திய சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக தற்போதும் வலம் வருகிறார். ஒரு படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கி அசத்தி வருகிறார். சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் நடித்து வந்த நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் லயன் படத்திலும் நயன்தாரா ஹீரோயின்னாக நடிக்கிறார் இதுவே அவருக்கு முதல் ஹிந்தி படம் ஆகும்.
இது ஒரு பக்கமிருக்க தமிழில் காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே திரையரங்கில் வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து நயன்தாரா கோல்டு, கனெக்ட் மற்றும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சினிமாவுக்கு உலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பையும் தாண்டி தனது காதலனுடன் இணைந்து பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்தது வெகு விரைவிலேயே திருமணம் நடக்க இருக்கிறது இப்படி இருக்கின்ற சூழலில் நயன்தாராவின் மாமியார் மீனாகுமாரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.