தனது மனைவியுடன் ஊர் சுற்றிய பிரபல நடிகரை விக்னேஷ் சிவன் உருக்கமாக பாராட்டி இருப்பது குறித்து தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இதனை அடுத்து ஜெய்யுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வரும் நிலையில் மறுபுறம் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இவருடைய கதை சரியாக அமையாத காரணத்தினால் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் வேண்டாம் என கூறி விட்டார்களாம்.
இது மக்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து விக்னேஷ் சிவன் லவ் டுடே இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் ஒன்றை உருவாக்க இருக்கிறாராம் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் சிம்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது நயன்தாரா பல நடிகர்களுடன் கிசுகிசுப்பில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த வகையில் ஒருவர் தான் சிம்புவும். சிம்புவும் நயன்தாராவும் சில காலங்கள் காதலித்து வந்ததோடு மட்டுமல்லாமல் இவர்கள் ஊர் சுற்றும் புகைப்படங்களும் வெளியானது இது உண்மை என நம்பப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் மூன்று பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இவ்வாறு ஹீரோவாக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் மாற்றியது போடா போடி திரைப்படம் தான் எனவே பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் சிம்புவால் தான் பாடலாசிரியராக, இயக்குனராகவும் அனைவருக்கும் பெரிய வந்ததாகவும், அவர்தான் தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் அவர் இல்லை என்றால் இந்த அளவிற்கு தன்னால் பிரபலமடைந்திருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.