தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா இவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா கடந்த ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அதன் பிறகு கடந்த வருடம் ஜூன் மாதம் சென்னையில் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்த பிறகு பல சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா அதிலிருந்து எப்படியும் மீண்டு வந்துள்ளார் ஆனால் இவருடைய இரட்டை குழந்தை சர்ச்சை செய்தி மிகப்பெரிய அளவில் வெடித்தது அதையும் எப்படியோ சரி கட்டி விட்டார் அதன் பிறகு தற்போது நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருந்தார் இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதலில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா தான் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் நடிகை திரிஷா அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டைட்டிலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று போடக்கூடாது வெறும் நயன்தாரா என்றுதான் போடவேண்டும் அப்படி போட்டால் என்னுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று எண்ணி விக்னேஷ் சிவனிடம் கூறியிருக்கிறார் ஆனால் விக்னேஷ் சிவன் உடனே திரிஷாவை தூக்கிவிட்டு அந்த படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தார்.
அதன் பிறகு தற்போது ஏகே 62 திரைப்படத்தை அஜித்தை வைத்து இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனம் நடிகை திரிஷாவை ஒப்பந்தம் செய்து உள்ளது ஆனால் ஏற்கனவே திருஷாவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பிரச்சனையின் காரணமாக விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் திரிஷா வேண்டாம் என்று அவரை ஒதுக்கி விட்டாராம்.
கடந்தா சில ஆண்டுகளாக மார்க்கெட் இல்லாமல் இருந்து வந்த நடிகை திரிஷா தற்போது தட்டித் தடுமாறி ஓரளவிற்கு முன்னேறி வருகிறார் அப்படி இருக்கையில் இது போன்ற உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்பை தட்டி பறிப்பது நியாயமா என்று சினிமா வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.