ஒருவழியாக திருமண தேதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா.? எங்க நடக்கப்போகுது தெரியுமா..

nayanthara and vignesh

திரை உலகில் பயணிக்கும்போது நடிகர் நடிகைகள், நடிகை இயக்குனர்கள் காதலித்து பின் திருமணம் செய்து கொள்வது மிக சாதாரண ஒன்றாக இருந்து வருகிறது ஆனால் ஒரு சிலர் மட்டுமே திரை உலகில் இருந்து கொண்டே பல வருடங்களாக காதலிக்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வருகின்றார். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன இருவரும் சினிமாவுலகில் இப்பொழுது பயணித்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை சற்று கவலை அடைய செய்து வருகிறது.

இவர்கள் இருவரும் இப்பொழுது கூட இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் பணியாற்றினர். அந்த படம் திரையரங்கில் வெற்றி பெற்று வருகிறது. சினிமா நேரம்போக  விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மீதி நேரங்களில் படங்களை தயாரிப்பது, பிசினஸ் என ஓடுகின்றனர் இருந்தாலும் சில நேரங்களில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சொல்லப்போனால் அண்மை காலமாக திருப்பதி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் ஒரு தகவல் மற்றும் தீயாய் பரவி வருகிறது அதாவது இந்த ஆண்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அடிகடி தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அதுவும் இவர்களது திருமணம் இந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் விக்னேஷ் சிவன் அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான் இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த கல்யாணத்தில் கலந்து கொள்வார்கள் அதன்பிறகு சென்னையில் பிரம்மாண்ட ரிசப்ஷன் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்களும் வெளிவருகின்றன. அதில் திரை பிரபலங்கள் நண்பர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.