கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்று என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண நிகழ்ச்சி தான். உலகிலுள்ள அனைவராலும் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதியினர்கலான இவர்களுக்கு நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
கோலிவுட் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் இவர்களைப் பற்றிய பல தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நயன்தாரா அணிந்திருந்த ஆடை அணிகலன்களை முதல் விக்னேஷ் சிவன் சொந்த ஊர் வரை அனைத்தும் தற்போது வரையிலும் சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது தான் திருமணம் பந்ததில் ஈடுபட்டுள்ளனர். தனது திருமணத்தை ஒட்டி விக்னேஷ் சிவனின் நெருங்கிய வட்டாரத்திற்கு நயன்தாரா நிறைய பரிசுகளை வழங்கி உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் குறிப்பாக விக்னேஷ் சிவன் தங்கை சூர்யாவிற்கு சுமார் 30 சவரன் தங்க நகைகளை பரிசாக நயன்தாரா வாழ்ந்து உள்ளாராம். மேலும் சுமார் 20 கோடிக்கு ஒரு பெரிய வீட்டை விக்னேஷ் சிவன் பெயருக்கு எழுதி வைத்துள்ளாராம் நயன்தாரா. இந்த செய்தி சமீப பிரபல பத்திரிக்கை ஒன்றில் வெளியாகிவுள்ளது.மேலும் இதனை நயன்தாரா வரதட்சணையாக கொடுத்தது போல பேசப்படுகிறது.அன்பு தந்த பரிசுகளை விக்னேஷ் சிவனுக்கு வழங்கியுள்ளார் என்பது சரியாக தெரியவில்லை.