இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் இந்தநிலையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர்கள் அடிக்கடி விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள்.
இருவரும் இணைந்து புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் படங்களையும் தயாரித்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள் இந்த நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார்கள். அந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தொடங்கிய நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர் என்று பெயர் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல்நிலையத்தில் அதிரடியாக புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பட நிறுவனத்திற்கு ரவுடி பிச்சர் என பெயர் வைக்கபடிருகிறது ஆனால் ரவுடிகள் மீது காவல்துறை அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில்.
இந்த டைட்டில் ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது அதனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் பணியாற்றினார்கள் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள்.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆகிய நிலையில் தற்பொழுது இதுபோல் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆரம்பத்தில் விட்டுவிட்டு இப்பொழுது இது போல் செய்வது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பழிவாங்குவது போல் தெரிகிறது.