தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் முதலில் ஐயா திரைப்படத்தில் அறிமுகமாகி பின் அவரது திறமையின் மூலம் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மற்றும் சோலோவாகவும் நடித்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்று சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் ரஜினியுடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். அந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் வேட்டையும் நடத்தியது.
மேலும் இவர் தமிழை தவிர தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களை கைப்பற்றி வந்த வண்ணமே உள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்த மற்றொரு டாப் நடிகையான சமந்தா நடித்து வருகிறார்.
இந்த படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளிவர உள்ளதாக தகவல்களும் ஏற்கனவே வெளியாகின. இந்தநிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களது பிறந்த நாள்களை மாறிமாறிக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் விக்னேஷ் சிவன் அவரின் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்து வெடி வெடித்து அமர்க்களமாக கொண்டாடி வந்துள்ளனர். அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக தெரிவித்துள்ளார்.
Birthday Bash 🌟🎉 #VikkyNayan pic.twitter.com/UtTqX6bJtx
— Nayanthara✨ (@NayantharaU) November 17, 2021