விடுமுறைக்காக ஏங்கிக் கிடக்கும் விக்னேஷ் சிவன் – டாட்டா காட்டும் நயன்தாரா.!

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து அசத்தியவர் அதோடு மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கொடியை நாட்டி உள்ளார்.

இதனால் தமிழ் சினிமாவிலும் சரி, தென்னிந்திய உலகிலும் சரி தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் தனது நடிப்புத் திறமைக்கு ஏற்றவாறு சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி ஓடிக் கொண்டிருக்கிறார் ஒரு திரைப்படத்தில் நடிக்க சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

சினிமா உலகில் என்ன தான் ஓடினாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவ்வபோது ஊர் சுற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மேலும் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்களையும் தயாரித்து வருகிறார். ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இருவரும் சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளனர் கடைசியாக கூட ராக்கி திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பிசினஸிலும் இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகின்றனர்.  இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொழுதை கழிப்பது மற்றும் அங்கு புகைப்படங்களை எடுப்பதுமாக இருந்து வந்துள்ளனர்.

அப்படி அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இணைந்து வெளியே சுற்றிய புகைப்படங்களை வெளியிட்டு சில பதிவுகளையும் அவர் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது : நீண்ட விடுமுறைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் நயன்தாராவுடன் டிராவல் பண்ண வேண்டும் ஆனால் இப்பொழுது மிஸ்  செய்வதாக சொல்லி உள்ளார்.