இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம். இவர் முதலில் சிம்புவை வைத்து போடா போடி என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அதன் பிறகு விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் தான் எடுத்தார்.
இந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் இவரது மார்க்கெட் உயர்ந்தது இந்த சமயத்தில் தான் அஜித்துடன் கைகோர்த்து ஏகே 62 திரைப்படத்தை எடுக்கப் போகிறார் என சில மாதங்களுக்கு முன்பே பெரிய அளவில் சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் AK 62..
திரைப்படத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார் என சோசியல் மீடியாவில் பெரிய வைரலானது காரணம் லைகா மற்றும் அஜித்திற்கு இவர் சொன்ன கதை சுத்தமாக பிடிக்காததால் விக்னேஷ் சிவனிடம் மாற்றம் செய்ய சொன்னது அவரும் அவகாசம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு கதையை சொன்னார்.
அந்த கதையுமே தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித்திற்கு பிடிக்காமல் போனதால் அவரை தூக்கி விட்டது இந்த செய்தியும் பெரிய அளவில் வைரலானதால் விக்னேஷ் சிவனின் பெயரோ ரொம்ப டேமேஜ் ஆனது. இதிலிருந்து மீண்டு வர அஜித் தவறவிட்ட அந்த கதையில் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைத்து தான் யார் என்பதை காட்ட விக்னேஷ் சிவன் துடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஒரே ஒரு படத்தில் நடித்து வெற்றி கண்ட பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனை சந்தித்து விக்னேஷ் சிவன் கதை கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் 90% பிரதீப் ரங்கநாதன் நடிப்பது உறுதி என கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் படம் எப்போ வெளியாகிறதோ அன்று தான் இந்த படமும் வெளியாகும் என கிசுகிசுக்கப்படுகிறது.