அந்த ஒரே ஒரு விஷயத்தில் விக்னேஷ் சிவன் கொஞ்சம் கூட லக்கி கிடையாது.! பரபரப்பை கிளப்பிய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி

சின்னத்திரைகளில் உள்ள நடிகைகள் பலரும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மிகவும் பிரபலமாகி விட்டார்கள் அந்த வகையில் பல நடிகைகளை கூறிவிடலாம். அந்த லிஸ்ட் இடம் பிடித்தவர் ஸ்ரீநிதி. இவர்  விக்கி மற்றும் நயன்தாரா ஜோடி பற்றி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் அது தற்பொழுது இணையதளத்தில் படு வேகமாக வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். சுமார் கடந்த ஏழு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள் உருகி உருகி  காதலித்து வந்த நயன்தாரா மற்ற விக்னேஷ் சிவன் அடிக்கடி வெக்கேஷனுக்காக வெளிநாடு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளுமா இல்லையா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இருந்தார்கள். எந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமணம் பல திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா மிகவும் பிசியாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் நயன்தாரா தற்பொழுது பாலிவுட் வரை சென்று உள்ளார்.

பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான ஜோடியாக நடித்து வருகிறார் அதேபோல் விக்னேஷ் சிவன் அவர்களும் அஜித்தை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விட்டார் இந்த நிலையில் அஜித்தை வைத்து 62 வது திரைப்படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். தற்பொழுது சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஸ்ரீநிதி. இவர் விக்கி மற்றும் நயன்தாரா ஜோடி பற்றி தெரிவித்துள்ள கருத்து இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி  வருகிறது.

இவர் இதற்கு முன்பு அஜித்தின் வலிமை திரைப்படத்தை விமர்சித்தது சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியது என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமான நடிகை இவர்  சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாராவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உண்மையாகவே சொல்ல வேண்டுமென்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது நயனுக்கு ஒரு தமிழ் பையன் கிடைத்திருக்கிறார் அவர் கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்வார் என்னை பொறுத்தவரை நயன்தாரா தான் லக்கி என வெளிப்படையாக ஸ்ரீநிதி பேசியுள்ளார்.

Leave a Comment