இயக்குனரும், பிரபல நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தற்பொழுது சின்னத்திரைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன்.
இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்பதால் படம் இயக்குவதற்காக கதையை உருவாக்கிக் கொண்டு பல நடிகர் நடிகைகளிடம் வாய்ப்பு கேட்டு வந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசியாக விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போக நயன்தாராவும் இவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் பெற்றது மேலும் இவருடைய திரை வாழ்க்கை நிஜ வாழ்க்கை இரண்டிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும் இந்த படத்தின் மூலம் நடிகை நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவ்வாறு இந்த படங்களை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். பிறகு விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இப்படிப்பட்ட நிலையில் அஜித்தின் 62வது படத்தினை இவர்தான் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான வேலைகளையும் விக்னேஷ் சிவன் முழு வீச்சில் மேற்கொண்டு வந்தார் ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தினை இயக்குவதற்கான வேலையை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த படத்தில் லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறாராம் இந்த படத்தினை கமலஹாசன் தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்பொழுது விக்னேஷ் சிவன் திடீரென்று சின்னத்திரைக்கு தாவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, காபி வித் டிடி நிகழ்ச்சி போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை விரைவில் தொடங்கப்பட உள்ளதாம். அந்நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் தொகுத்து வழங்க இருப்பதாக கூற இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.