நயன்தாராவை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை தேடும் விக்னேஷ் சிவன்..! வெடிக்கும் முதல் சண்டை..!

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து சினிமாவே கதி என சிறப்பான கதை அம்சம் வரும் படங்களை தேர்வு செய்து நடித்து ஓடிக் கொண்டிருந்தார். பின்பு ஒரு கட்டத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நயன்தாரா மற்றும் விக்கி ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் போன்ற சிலர் மத்தியில் திருமணம் செய்து கொண்டாலும் திருமணம் பிரம்மாண்டமாக அரங்கேறியது. கல்யாணத்தில் விக்கி மற்றும் நயன்தாரா ஜோடி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த சில நாட்கள் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் ஊர் சுற்றி வந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் அவர்களது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நயன்தாரா ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் படக்குழுவில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் அடுத்து அஜித்தின் ஏகே 62 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளதால் அதற்கான வேலைகளில் மும்பரமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கல்யாணம் ஆகி ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் விக்கி மற்றும் நயன்தாராவிற்கு முதல் சண்டை ஏற்பட்டுள்ளதாம். அந்த சண்டை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்க உள்ள அஜித்தின் படத்தில் ஹீரோயின் நயன்தாரா தான் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளிவந்ததை எடுத்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளாராம்.

இந்த செய்தியை அறிந்த நயன்தாரா விஜய் சேதுபதி இடம் பிரச்சனை செய்து வருகிறார். மேலும் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ஹீரோயினாக நடித்திருந்தனர். அப்போதே விக்னேஷ் சிவன் சமந்தாவின் நெருக்கத்தை பார்த்து நயன்தாரா சற்று கோபம் அடைந்தார். இப்போது இந்த செய்தியையும் அறிந்த நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் சண்டையை ஆரம்பித்துள்ளார். மேலும் அஜித்தின் 62 ஆவது படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாக தெரிய வருகிறது.