பல இயக்குனர்கள் வலைவிரித்தும் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் சிக்கிய பிரபல பாடகி..!

vignesh
vignesh

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். பொதுவாக அனிருத் இசையில் உருவாகும் பெரும்பாலான பாடல்கள் அனைத்தையுமே ஜொனிதா காந்தி என்பவர்தான் பாடியுள்ளார்.

அந்த வகையில் இவருடைய குரலில் பாடிய செல்லம்மா என்ற பாடல்தான் அது மிகப் பெரும் அளவிற்கு வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பீஸ்ட் என்ற  திரைப்படத்தில் கூட அரபி குத்து என்ற பாடல் மிகவும் பிரபலமான நிலையில் இந்த பாடலை நமது பாடகி ஜொனிதா காந்தி என்பவர்தான் பாடி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது பார்வைக்கு குரல் மட்டும் வளம் கிடையாது அழகும் கூட அந்த வகையில் பல்வேறு மக்கள் இயக்குனர்களும் இவருடைய குரலைக் கேட்டு இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள் அந்த வகையில் ஜோனிட காந்தி பாடல் பாடுவதில் ஆர்வம் இருப்பதால் நடிப்பதற்கு வரும் வாய்ப்பை தவிர்த்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் விநாயக் என்ற ஒரு அறிமுக இயக்குனர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நமது சுனிதா காந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று திரைப் படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்த கிருஷ்ணகுமார் என்பவர் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை நமது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளார்களாம். மேலும் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்குள் இருக்கும் உண்மையான காதலால் ஏற்படும் விளைவுகள் அவற்றை இருவரும் எப்படி சமாளித்து இறுதியில் சேர்க்கிறார்கள் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

nayanthara
nayanthara