திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாராவை பற்றி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த தற்போது திருமணம் முடிந்துள்ளது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் நேற்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவர் மத்தியிலும் நடைபெற்று முடிந்த நிலையில் பலரும் இவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.
மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் அதிகமாக வெளியாகவில்லை என்றாலும் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. மேலும் இவர்களின் திருமண வீடியோ படமாக்கப்பட்ட நெட்ப்ளிக்ஸ் சரியாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை பற்றி நிகழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நயன்தாராவிடம் என்று ஆரம்பத்தில் அழைத்து, அதன்பின் காதம்பரி, தங்கமே, மை பேபி, எனது உயிர் மற்றும் என் கண்மணி என்று அழைத்தேன்.
இன்று முதல் அவர் எனது மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் சேர்த்து அவர் வெளியிட்ட புகைப்படமும் பெரியளவில் வைரலாகி வருகிறது.