அஜித் பிறந்தநாளில் சூப்பரான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன் – ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ரெடியான AK 62.

ajith viknesh
ajith viknesh

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அஜித்தின் திரைப்படம் வெளிவருகிறது என்றால் அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்ப்பார்கள். அந்தவகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கியது.

இதைத் தொடர்ந்து அஜித் தற்போது வலிமை படத்தின் அதே கூட்டணியுடன் மீண்டும் ஒருமுறை இணைந்து AK 61திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெறும் மூன்றே மாதங்களுக்குள் எடுத்து படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து தீபாவளியன்று வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை அடுத்து அஜீத் அடுத்து நடிக்க உள்ள 62வது திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதன்படி இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 வது படத்தை இயக்க உள்ளார். இதனால் இந்த படத்தை விக்னேஷ் சிவன் அஜித்திற்காக பார்த்து பார்த்து கதையை செதுக்கி வருகிறார்.

மேலும் சமீபத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படம் குறித்து விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் பேசும்போது அஜித்தின் 62 வது படம் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியது “அஜித் சாரின் வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பாக மங்காத்தா படத்தின் இன்டர் வல் காட்சியில் அஜித் சார் மட்டுமே நடித்து அசத்தியிருப்பார்”. அப்படித்தான் தனது AK62 வது படத்தையும் எடுக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.