கோலிவுடில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திருமணமான நான்கே மாதங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சியாக சோசியல் மீடியாவில் தெரிவிக்க இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகள் மற்றும் நயன்தாரா விக்னேஷ் அவனை விமர்சித்து வந்தார்கள் அந்த வகையில் சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்று நயன்தாரா விக்னேஷ் சிவன் மேல் விசாரணை எடுக்க வேண்டும் எனவும் கூறி வந்தார்கள். அந்த வகையில் இந்த விசாரணையில் 6 வருடத்திற்கு முன்பே நயன் – விக்கி திருமணம் செய்து கொண்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
இதன் மூலம் விரைவில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக சினிமாவில் ஒரு அந்தஸ்தில் இருந்து வரும் நடிகைகள் விரைவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் அப்படி திருமணம் செய்து கொண்டாலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக பல நடிகர், நடிகைகளை கூறலாம்.
அந்த வகையில் நயன்தாராவும் சினிமாவில் முக்கிய அந்தஸ்தில் இருந்து வரும் நிலையில் தன்னுடைய வேலைக்கும் அழகுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இவர்களை பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் அனைவருக்கும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேஷ் சிவன் பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகன் என் மேல் யூரின் போனதை புகைப்படம் எடுத்து ஆனந்தத்துடன் பதிவு செய்துள்ளார். தந்தையாக மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.