தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு பெண்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் நேற்று மிகவும் கோலாகலமாக மகாபலிபுரம் திருமணம் நடைபெற்று முடிந்தது.
அரசியல் பிரமுகர்கள், இந்திய திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்ட இவர்களை ஆசீர்வாதம் செய்தனர். இவர்களின் திருமணங்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக சிறப்பான வரவேற்புவுடன் விருந்து மிக அருமையாக இருந்தது என்று கூறப்படுகிறது.
இவர்களின் திருமணத்தில் செய்தி வாசிப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை. மேலும் திருமணத்திற்கு வரும் நடிகர், நடிகைகளும் இந்த புகைப்படமும் எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
பல கோடி செலவில் இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களின் திருமணத்தை படமாக கௌதம் மேனன் இயக்கவுள்ளார். விரைவில் ஓடிடி வழியாக வெளியாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக இணைந்து நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றும் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாகவும் அதிலிருந்து தற்போது வரையிலும் காதலித்து தற்போது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் 1000 கணக்கான நடிகர்,நடிகைகள் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியம்மா விக்னேஷ் சிவன் தன்னை திருமணத்திற்கு அழைக்க வில்லை என வருத்தமாக பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் சிறு வயதில் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் வீட்டிற்கு தான் வருவான், உங்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான், அவன் திருமணத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக வரலாம் என்ற திட்டத்தில் தான் இருந்தோம், ஆனால் அழைப்பு வரவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேண்டுமென்றும் திருமணத்திற்குப் பிறகாவது விருந்திற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.