தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகைதான் நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்த நமது நடிகை பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்து தற்பொழுது அசைக்க முடியாத இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று விட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இன்று மிகக் கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவ்வாறு இந்த திருமண விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் மணிரத்தினம் ரஜினி சாருக்கு அட்லி போனிகபூர் போன்ற முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இப்படி பல பேர் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தில் விக்னேஷ் சிவன் தன்னுடைய பெரியம்மாவை அழைக்க இல்லையாம்.
அவருடைய பெரியம்மா மிகுந்த மனவருத்தத்தில் இருப்பது மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார் இவர் வேறு யாரும் கிடையாது தன்னுடைய தந்தை சகோதரர் மனைவிதான். அந்த வகையில் விக்னேஸ்வரன் பள்ளிப்படிப்பு படிக்கும் பொழுது அவருடைய தந்தை என்னிடம் தான் அழைத்து வந்து விடுவார் என கூறி உள்ளார்.
அந்தவகையில் விக்னேஷ் சிவன் எங்களை திருமணத்திற்கு அழைப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் குலதெய்வ கோயிலுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என நான் தான் கூறினேன் ஆனால் அதைக்கூட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனியாக சென்று செய்துவிட்டார்கள்.
இவ்வாறு எங்களை இவர்கள் மறுத்தாலும் பரவாயில்லை திருமணம் முடிந்து எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தால் நாங்கள் சந்தோஷப் படுவோம் என கண்ணீர் மல்க விக்னேஸ்வரன் பெரியம்மா கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.