AK 62 : லைகாவிடம் கெஞ்சும் நயன்தாரா.. லைக்கை போட்டு குழப்பதை ஏற்படுத்திய விக்னேஷ் சிவன்.! நடந்தது என்ன

ajith
ajith

நடிகர் அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அவரது அடுத்த படமான 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க தற்போது மும்பரம் காட்டியுள்ளார். இந்த படம் விக்னேஷ் சிவன்..

இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் என சில மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக்கா ப்ரொடக்சன் மற்றும் அஜித்திடம் ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை அவர்களுக்கு பிடித்துப் போகவே..

இதனை இன்னும் சிறப்பாக கொண்டு வாருங்கள் எனக் கூறியுள்ளனர் ஆனால் தற்போது  பல மாதங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷனுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் இயக்குனரை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நயன்தாரா கால் செய்து லைக்கா ப்ரொடக்ஷனுக்கு பேசியும் அவர்கள் கேட்ட பாடில்லை. அதன்படி அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. AK 62 படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை netflix ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார். அதனால் ரசிகர்கள் பலரும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளாரா இல்லை வேறு இயக்குனர் இயக்க உள்ளாரா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை..