சோகத்தில் வாடிய அஜித்திற்கு ஆறுதல் சொன்ன விக்னேஷ் சிவன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

ajith
ajith

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தூங்கும்போது இறந்துவிட்டார் என்ற செய்தி பெரிய அளவில் வெளியானது அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக தளபதி விஜய்,பெசன்ட் நகர் ரவி, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்கள் அங்கு சென்றனர் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது. அஜித் சத்தமே இல்லாமல் அமைதியான முறையில் அப்பாவின் உடலை அடக்கம் செய்தார் அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது வர முடியாத பிரபலங்கள் ஊடகங்கள் வாயிலாக தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர்.

கமல் தொடங்கி பலரும் தெரிவித்த நிலையில் அஜித்துடன் கடந்த சில மாதங்களாக சண்டை போட்டுக் கொண்ட விக்னேஷ் சிவன் திடீரென அஜித்திற்கு ஆறுதல் சொல்லியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அஜித்தின் 62 வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என சொல்லப்பட்டது ஆனால் கடைசியில் அவர் சொன்ன ஸ்கிரிப்ட் திருப்தி தராததால் அவரை தூக்கியது.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தை தாக்கும் வகையில் பதிவுகளை போட்டு வந்த நிலையில் அஜித்தின் அப்பா இறந்ததை அறிந்த விக்னேஷ் சிவன் பழசை எல்லாம் மறந்து ஆறுதல் கூறும் வகையில் ஒரு பதிவை போட்டு உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.. அஜித் சார் எப்பொழுதுமே தனது பெற்றோர் மீது கொண்டிருக்கும் அன்பு அளவு கடந்தது..

இப்பொழுது அஜித்தின் தந்தை சுப்பிரமணியனின்  இழப்பு அவரால் தாங்க முடியாத ஒன்று அஜித்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பை தாங்கி கொள்ளும் அளவிற்கு சக்தியை கொடுக்குமாறு இறைவனை பிரார்த்தித்து  கொள்வதாக விக்னேஷ் சிவன் தனது insta பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்  பழசை மறந்து இப்படி ஒரு விஷயம் செய்தது சூப்பர்  என கூறி கமெண்ட் அடித்து வருகிறனர்.

vignesh shivan
vignesh shivan