நயன்தாரா இல்லாமல் ஒன்டிகட்டையாக பொங்கல் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

nayan

சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஆக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு இந்த திரைப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டது.அந்த வகையில் இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம்.

நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்த வந்தாலும் இதற்கு முன்பாக இரண்டு காதல் தோல்வியை சந்தித்தவர். என்னதான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் மிகுந்து இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவர்தான் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் நயன்தாரா கிளாமரான திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது உச்சத்திற்கு சென்றதால் கவர்ச்சி காட்டுவதற்கு தயங்குவது மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் திரைப்படங்களில் இவர் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றுவதும் புகைப்படங்கள் வெளியீடு வரும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட புதுவருட தினத்தை துபாயில் சென்று கொண்டாடி வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.

இவ்வாறு அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் இன்று பொங்கல் தினத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து கொண்டாடுவார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வந்தார்கள்.

vignesh-2
vignesh-2

ஆனால் விக்னேஷ் சிவன் பொங்கல் தினத்தை சபரிமலையில் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் லைக்குகளை பெற்று  ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

vignesh-2