மாமனார் ஊருக்கு சென்ற விக்னேஷ் சிவன் – கேரளாவில் சுற்றித்திரியும் ஜோடி.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

nayanthara-
nayanthara-

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. தமிழை தவிர நயன்தாரா பாலிவுட்டிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 7 வருடங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சிறப்பாக  திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்திற்கு ரஜினி, ஷாருக்கான், அட்லி, கார்த்தி, சூர்யா, டிடி போன்ற பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்து வைத்தனர்.

இவர்களது திருமணம் பாரம்பரிய முறையில் சிறப்பாக முடிவு பெற்றதையடுத்து  திருமணத்திற்கு முன் காதலர்களாக இருவரும் ஒன்றாக வெளியே சென்று வந்த நிலையில் தற்போது புதுமண தம்பதிகளாக சில முக்கிய இடங்களுக்கு சென்று வரும் விக்கி நயன்தாராவின் புகைப்படம் தான்.

தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வருகின்றனர். அந்தவகையில் திருமணமான அடுத்த நாள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவிற்கு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு இந்த புதுமண தம்பதிகளை உறவினர்கள் பலரும் நல்ல வரவேற்பு அளித்த நிலையில்  விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அங்கு பாரம்பரிய உடையில் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த புகைப்படம் கூட தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன.

viki and nayanthara
viki and nayanthara