புகைப்படத்துடன் தனது இரட்டைக் குழந்தையை வெளி உலகத்திற்கு காட்டிய விக்னேஷ் சிவன்.!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.  அதுமட்டும் இல்லாமல்  நடிகை நயந்தரா  தமிழ் சினிமாவில் முன்னணி   நடிகையாகவும்  வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும்  சென்னையில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் சென்னையில் ஒரு பிரமாண்டம் ஹோட்டலில் நடைபெற்ற முடிந்தது. மேலும் நடிகை நயன்தாரா திருமணம் அறிவிப்பின் போது நாங்கள் திருப்பதியில் திருமணம் செய்ய போவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் நடிகை நயன்தாரா  சென்னையில் பிரமாண்டோ ஹோட்டலில் திருமணத்தை முடித்துக் கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு நடிகர் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஹனிமூன் சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்கள் இந்த புகைப்படம் செம வைரல் ஆனது. மேலும் நடிகை நயன்தாரா ஹனிமூன் முடிந்த கையோடு ஜவான் படத்தில் நடிக்க சென்று விட்டார்.

அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் ஆளுக்கொரு ஒரு குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என்று விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayan vikki
nayan vikki