தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுக்கு கதை சொல்லும் அளவிற்கு உயர்ந்து உள்ளவர் விக்னேஷ் சிவன். இவர் முதலில் போடா பொடி என்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார் அதனை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல்..
என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த இவர் அடுத்ததாக அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குவதாக தகவல்கள் எல்லாம் கூறப்பட்டது. கடைசியாக இவர் சொன்ன கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போக அவரை ரிஜெக்ட் செய்தது இதனை அடுத்து விக்னேஷ் சிவன் நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுடன் கூட்டணி அமைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படி திரையுலகில் ஓடும் விக்னேஷ் சிவன் மறுபக்கம் நிஜ வாழ்க்கையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு அப்பாவாகி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..
நான் போடா போடி கதையை எழுதிவிட்டு பல நடிகர்களிடம் சென்று கதை கூறினேன் ஆனால் அவர்கள் நான் அறிமுகம இயக்குனர் என்பதால் என் கதையை முழுமையாக கேட்காமல் கூட ரிஜெக்ட் செய்து விட்டார்கள் சிம்பு தான் என் கதைக்கும் எனக்கும் ரெஸ்பெக்ட் செய்து நான் நடிகறேன் என ஒப்புக்கொண்டார் அது மட்டுமல்லாமல் அவர் லிரிக்ஸ் எழுதச் சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்..
எனவே சிம்பு தான் தன் சினிமா பயணத்திற்கு ஆரம்பத்தில் பெரிதும் உதவினார் என வெளிப்படையாக போட்டு உடைத்தார். நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்புவை பற்றி இப்படி விக்னேஷ் சிவன் பேசியுள்ளது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது