என் பேச்சை இந்த ஒரு தடவையாவது கேளு.. நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்.!

actress nayanthara
actress nayanthara

Nayanthara : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து மார்க்கெட்டை சரியா விடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளார் தற்பொழுது கூட ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் படம் செப்டம்பர் மாதம் 7 தேதி வெளியாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து டெஸ்ட், நயன்தாரா 75 போன்ற படங்களிலும் இவர் கமிட் ஆகியுள்ளார். மறுபக்கம் சினிமாவில் படங்களை தயாரிக்கிறார். மேலும்  பல்வேறு நிறுவனங்களின் மீதும் முதலீடு செய்துள்ளார். இதனால் நயன்தாராவுக்கு நாலாபக்கமும் காசு மழை குவிக்கிறது.

சினிமாவில் இப்படி ஓடினாலும் தனது இரண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.  அண்மையில் கூட தனது இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் விக்னேஷ் சிவன்  நயன்தாராவுக்கு ஒரு கண்டிஷன் போட்டது வைரலாகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு திருமணத்திற்கு முன்பே  வாய்ப்பு வந்தாம்.. இதை அறிந்த விக்னேஷ் சிவன் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது ஆனால் பாலிவுட் பக்கம் போய் நடிக்க ஆரம்பித்தால் ரொம்ப லேட் ஆகும் அதனால் முதலில் என்னை திருமணம் செய்து கொள் அதன் பிறகு நீ போய் நடிக்க போன என கூறினாராம்.

நயன்தாராவும் உடனே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு தான் ஜவான் படத்திற்கு நடிக்க போனாராம்.. தற்போது அந்தப் படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தடுத்த படமும் பண்ண இருக்கிறார் அந்த படத்திற்காக தனது சம்பளத்தை உயர்த்தவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக ஒரு புதிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.