விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மறக்க முடியாத அளவுக்கு மாற்றிய நயன்தாரா ..! ரொமான்டிக் மூடில் அசத்தும் ஜோடி.

vignesh-shivan

விக்னேஷ் சிவன் முதலில் இயக்குனராக தன்னை வெளிகாட்டி கொண்டாலும் காலப்போக்கில் அவர் தயாரிப்பாளர், பாடகர் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பன்முகத்தன்மை கொண்டவராக சினிமா உலகில் விளங்குகிறார். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த இவர் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது நயன்தாராவுக்கும், இவருக்கும் இடையே காதல் மலரந்தது.

அதன் பிறகு இருவரும் ஒரு பக்கம் காதலித்தாலும் மறுபக்கம் பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்தும் ஓடிக்கொண்டிருந்தனர் இதனால் இந்த ஜோடிக்கு நாலா பக்கமும் காசு வந்தது.. இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்தது அதை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டது.

அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என இரண்டையும் சரியாகப் பிரித்து தற்பொழுது பயணித்து வருகிறது நயன்தாரா படப்பிடிப்பை ஊரளவு முடித்துவிட்டு உள்ளதால் தனது கணவன் விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு வெளிநாடு பக்கம் சுற்றித்திரிந்து வருகிறார் அதுவும் ஸ்பெயின் நாட்டில் இவர்கள் எடுத்துக் கொண்ட வீடியோ, புகைப்படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வைரலானது.

இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் காணும் முதல் பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்த நாளை பெரிதாக பார்க்கப்பட்டது அதன்படி நேற்று இரவு உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிஃபா கோபுரம் முன்பு நின்று விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மேலும் அப்பொழுது விக்கி – நயந்தாரா இருவரும் ரொமான்டிக்காக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர் அவை அனைத்தும் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ ரொமான்டிக் மூட்டில் விக்கி – நயன்தாரா அசத்தும் அந்த அழகிய புகைப்படம்..

wikki and nayanthara
wikki and nayanthara