விஜய், லோகேஷ் ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..

vignesh shivan
vignesh shivan

Vignesh Shivan: விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது நடிகர் விஜய் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக சில போஸ்ட்டுகள் சோசியல் மீடியாவில் வைரலானது இதற்கு விக்னேஷ் சிவன் லைக்களை போட்டிருந்தார் இதுதான் பிரச்சனைக்கு காரணம்.

சமீப பேட்டியில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ் நானும் விஜய்யும் சண்டை போட்டதாக போஸ்டர்கள் வெளியானது இந்த தகவலை இரண்டு பேரும் சேர்ந்து பார்த்து சிரித்தோம் என கூறினார். இந்த சூழலில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவர் வெளியிடும் போஸ்டுகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அப்படி நயன்தாரா மற்றும் தனது மகன்கள் உயிர் மற்றும் உலகம் உள்ளிட்டவர்களுடன் அடிக்கடி ஹாப்பியாக இருக்கும் போஸ்ட்டுகளை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு திடீரென விஜய் மற்றும் விக்னேஷ் சிவன் குறித்த போஸ்ட்டுகளுக்கு லைக் போட்ட விக்னேஷ் சிவனை ரஜினி ரசிகர்கள் விக்னேஷ் சிவன் எங்க சைடு என்றும் அவருக்கு உண்மை தெரிந்த தான் லைக் போட்டார் எனவும் கோர்த்து விட்டார்கள்.

எனவே இதற்கு விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் போட்டோவை பார்த்தவுடனே எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர் என்பதால் லைக் போட்டு விட்டேன். அந்த வீடியோவை நான் பார்க்கவே இல்லை, ஆனால் அதன் பின்னர் தான் இப்படி ஒரு பஞ்சாயத்து என்னுடைய லைக்கை வைத்து ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன். எந்தவொரு உள்நோக்கத்துடனும் இதை நான் செய்யவில்லை நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜன் தீவிர ஃபேன் நான், அவர்கள் ஒர்க் எனக்கு ரொம்பவே பிடிக்கும் என கூறினார்.

மேலும் விஜய் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் என்னை மன்னித்து விடுங்கள் நான் அந்த வீடியோவில் உள்ள கண்டன்ட்டை பார்க்காமல் வெறுமனே லைக் போட்டதுதான் பெரிய தப்பாகிவிட்டது. அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். இது நான் தெரியாத தனமாக செய்த பிழை தான் இதை வைத்து யாரும் தேவையில்லாமல் மேலும் கமெண்ட் போட்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். லியோ படம் 19ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் அடிக்கப் போகிறது அதை காண காத்திருக்கிறேன் உங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பிங்கள் என தெரிவித்துள்ளார்.