குண்டு குழந்தையாக மாறி அலப்பரை பண்ணும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.! வைரலாகும் வீடியோ

nayanthara viknesh shivan

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா(nayanthara). இவர் ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களை பெற்றவர் ஆனால் விமர்சனங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.

இவர் தற்பொழுது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார், இவர் சிம்பு, பிரபுதேவா ஆகியோரின் பிரேக்கப்பிற்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் தஞ்சம் புகுந்தார். இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து கொள்கிறார்கள் என்பதை வெளிப்படையாக இதுவரை எந்த ஒரு பேட்டியிலும் கூறவில்லை ஆனால் அடிக்கடி ஒன்றாக அவுட்டிங் செல்வது புகைப்படத்தை எடுத்து வெளியிடுவது என்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

விக்னேஷ் சிவனுடன் நீண்டகாலமாக காதல் உறவில் இருக்கும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்தது, தற்போது நாடு முழுவதும் கொரோனா(corona) வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் ஷூட்டிங் படப்பிடிப்பு என அனைத்தும் தடைபெற்றுள்ளது.

அதனால் பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் சூட்டிங் இல்லாமல் இருந்துவரும் விக்னேஷ் சிவன்(vignesh shivan), நயன்தாரா இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக நேரத்தை கழித்து வருகிறார்கள், அது மட்டுமில்லாமல் இருவரும் இணைந்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் குண்டு குழந்தையாக மாரி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வீடியோவை வெளியிட்டுளளார்கள் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்க்கு ரசிகர்கள் பலரும் லைக் போட்டும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.