தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா இவர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவரின் கால்ஷிட்டிற்காக பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அனைத்து சர்ச்சைகளையும் ஓரங்கட்டிவிட்டு தன் நடிப்பதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அப்படி நடிப்பதில் முழு கவனம் செலுத்தியதால் தான் இவர் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார், நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் உடன் காதல் மலர்ந்தது, ஆனால் இருவரும் காதலிக்கிறோம் என்று வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும் அடிக்கடி ஒன்றாக வெளிநாடுகளுக்குச் சென்று ஊர் சுற்றுவது அங்கு புகைப்படத்தை எடுத்து வெளியிடுவது என வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
சமீபத்தில் கூட வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது ஆனால் இதனை இருவரும் மறுத்தார்கள்.
இந்தநிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பேஸ் ஆப் மூலம் ஒரு வீடியோவை வெளியிட்டார்கள் அந்த வீடியோவில் குழந்தைபோல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருந்தார்கள் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்தநிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நயன்தாராவை இழுத்து பிடித்து நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதேபோல் நயன்தாராவும் விக்னேஷ் சிவன் இடுப்பில் கையை வத்து வெட்கப்பட்டு நெற்றியை காட்டுகிறார். இந்த புகைப்படத்தை விக்னேஷ் வந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் டேய் என் செல்லத்தை என்னடா பண்ற என கமெண்ட் செய்து வருகிறார்கள்.