தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு நிகராக அயராது உழைத்து அதிக ரசிகர்களை உருவாக்கி முன்னுக்கு வந்தவர் நயன்தாரா. இவர் எடுத்த உடனேயே சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். இருந்தாலும் இவரது நடிப்பு திறமையின் காரணமாகவே அடுத்தடுத்து அதிக வாய்ப்புகளை கைப்பற்றி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.
இவர் சோலோவாகவும் பல கருத்துள்ள படங்களை கொடுத்து மற்ற இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக மாறியுள்ளவர். அண்மையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வெளிவந்த கனெக்ட் திரைப்படம் வெற்றி நடை கண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நயன்தாரா 75 போன்ற இன்னும் சில திரைப்படங்களிலும் கமிட்டாகி உள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் தொடர்ந்து பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை இந்த ஆண்டு கரம் பிடித்தார். ஆம் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது
திருமணம் முடிந்த கையோடு சில தினங்கள் ஹனிமூனுக்கு வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆன நான்கே மாதத்தில் தனது இரு மகன்களை அறிமுகப்படுத்தினர். விக்கி மற்றும் நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரு அழகான மகன்களை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது மனைவி மற்றும் அழகான குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதில் இரு குழந்தைகளையும் எனது உயிர் உலகம் என குறிப்பிட்டு விக்கி மற்றும் நயன்தாரா குடும்பத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதோ வீடியோ..