vignesh shivaan memes on nayanthara viral:கோலிவுட்டில் தற்போது இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரின் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை விட வித்தியாசமாகவே இருக்கும்.
காமெடி, காதல், பைட் என அனைத்துமே வித்தியாசமான முறையில் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது தனது காதலியான நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நெற்றிக்கண் திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியான blind என்ற கொரியன் படத்தின் ரீமேக் என்பது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பலர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நெட்பிலக்ஸில் நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனை பார்த்த நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் அவர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து உள்ளார். தற்போது அந்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த மீம்ஸ்.