தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது சினிமா மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து சினிமாவில் வெற்றியை கண்டு வந்தாலும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது.
நயன்தாரா குடும்பமும் ரசிகர்களும் ரொம்ப கவலைப்பட்டனர். அதற்கு முடிவு கட்டும் வகையில் 6 வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா ஒருவழியாக ஜூன் 9ஆம் தேதி உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் விக்கி நயன்தாரா.
கல்யாணத்திற்கு ரஜினி தாலி எடுத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக அரங்கேறும் முடிந்தது நயன்தாரா கல்யாணத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் தான் திருமணத்தில் கலந்து கொண்டனர். ஒருவழியாக வெற்றிகரமாக திருமணம் முடிந்தது அதன்பிறகு விக்கி – நயன்தாரா உடனடியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இப்பொழுது விக்கி தனது மாமியார் வீட்டிற்கு சென்று தற்போது இருக்கிறார் அங்கு கோயில் மற்றும் பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று அசத்தி வருகின்றனர் விக்கி நயன்தாரா அதன் புகை படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் விக்கி – நயன்தாரா கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு செய்தனர் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் விக்கி நயன்தாரா கல்யாணத்துக்கு ஒட்டு மொத்தமாக சுமார் 20 கோடி செலவு செய்தனர் ஆனால் நெட்லிஃபி நிறுவனம் விக்கி நயன்தாரா திருமண வீடியோக்கு மட்டுமே சுமார் 25 கோடி கொடுத்து உள்ளது. எப்படிப் பார்த்தாலும் 5 கோடி விக்கி நயன்தாராவுக்கு லாபமாக தான் இருக்கிறதாம்.