கொரோனா பிரச்சினை ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இந்த நிலையில் மக்களின் இயல்புநிலை வாழ்க்கை இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களை போல் பிரபலங்களும் ஊரடங்கு எந்த ஒரு வேலையும் இல்லாமல் முடங்கிக் கிடந்தார்கள். மேலும் கொரோனா பிரச்சனை அதிகமாக இருந்ததால் பிரபலங்கள் பலரும் சத்தமே இல்லாமல் திருமணங்களையும் செய்து கொண்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் சில நடிகைகள் இந்த கொரோனா ஊரடங்கில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் இதில் சினிமா நடிகைகள் மட்டுமல்லாமல் சீரியல் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் சத்தமே இல்லாமல் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டவர் வித்யூலேகா.
இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். 2012ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.
இவர் கொஞ்சம் குண்டாக இருப்பதால் உருவ கேலிக்கு ஆளானார் அதனால் எப்படியாவது உடல் எடையை குறைத்து விட வேண்டும் என டயட் ஜிம் என கடைபிடித்து அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் திருமணம் சத்தமில்லாமல் நடைபெற்றது.
தான் திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் மாலத்தீவில் ஹனிமூன் சென்றுள்ளார் அப்போது அங்கு தங்கள் தங்கியிருந்த ஹோட்டல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் தற்பொழுது வித்யூலேகா சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றியதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் அந்த புகைப்படத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது போல் உடை அணிந்திருந்தால் திருமண வாழ்க்கையில் விரைவில் பிரச்சினைதான் உங்களுக்கு ஒழுங்காக ஆடை அணிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விவாகரத்து ஏற்படும் எனக் கூறியிருந்தார். அதைப் பார்த்த பெண் ரசிகை ஒருவர் ஒழுங்காக ஆடை அணிந்து கொண்டு இருக்கும் அனைவரும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கிறார்கள் என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.