Actress Vidhya Balan birthday wishes video to charlie chaplin: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யாபாலன். பாலிவுட் சினிமாவில் ஒல்லியாக இருந்தால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என இருந்த காலத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதை எல்லாம் தவிடுபொடியாக்கியவர் நடிகை வித்யாபாலன். இவர் 2003ஆம் ஆண்டு பாலே தேகோ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து அவர் பரிநீத்தா, குரு, முக்தி, பா, ஓம் சாந்தி ஓம், தி டர்டி பிக்சர், உருமி போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் வித்யாபாலன். அதுமட்டுமில்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார் வித்யாபாலன்.
இந்தநிலையில் சார்லி சாப்ளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் அவரைப்போலவே மாறி நடித்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் வித்யா பாலன். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது
இதோ அந்த வீடியோ.
#vidyabalan #actress pic.twitter.com/CC7snufZ2o
— Tamil360Newz (@tamil360newz) April 18, 2020