அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் பொம்பளைங்க மேல கை வைச்சா மரண பயம் வரணும்.. வெளியானது விடுதலை பட டிரைலர்

viduthalai-
viduthalai-

தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர் வெற்றிமாறன். இவரை எடுத்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான். குறிப்பாக தனுஷை வைத்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திது வந்த இவர் தற்பொழுது மற்ற நடிகர்களை வைத்து படம் பண்ணவும் ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் காமெடி நடிகர் சூரி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்னும் படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது முதல் பாகம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், ரெட் ஜெயண்ட்  மூவி படத்தை வெளியிடுகிறது.

விடுதலைப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி உடன் இணைந்து பாவணி  ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர், சேத்தன், பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் அழகாக நடித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் முழுக்க முழுக்க மலை வாழ் மக்களும், போலிஸ்க்கும்  இடையே நடக்கும்..

ஒரு பிரச்சனையை தான் மையமாக வைத்து படம் நகர்ந்து உள்ளது என சொல்லப்படுகிறது. இதனால்  எதிர்பார்ப்பு படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்திலிருந்து அதிகரித்து நிலையில் தற்போது படம் ரிலீஸ் ஆக உள்ளுவதால் தாறுமாறாக எகிறி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இதோ காமெடி சூரி மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை டிரைலர் நீங்களே பாருங்கள்.