Viduthalai Part-2 : தொக்கான நடிகையை தட்டி தூக்கிய வெற்றிமாறன்.! விடுதலை 2 – ல் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவர்தானா.?

Viduthalai part 2
Viduthalai part 2

Viduthalai Part-2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம், விசாரணை, அசுரன் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியாக்கிய திரைப்படம் விடுதலை இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படமும் விரைவில் தொடங்க இருக்கிறது. விடுதலை இரண்டாவது பாகத்தில் அதிகமாக விஜய் சேதுபதி காட்சிகள் தான் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

அப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, ஏற்கனவே வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது அதனால் விடுதலை இரண்டாவது பாகத்திலும் மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

விடுதலை இரண்டாவது பாகத்தில் வெற்றிமாறன் மஞ்சு வாரியரை வைத்து தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என கூறப்படுகிறது தற்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் மஞ்சு வாரியரின் காட்சிகள் படமாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை முதல் பாகம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தது அதேபோல் விடுதலை இரண்டாவது பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.