விடுதலை படம் OTT யில் ஒரு காட்சிகள் கூட நீக்காமல் அப்படியே இருக்கும்.! கிட்டத்தட்ட முழு திரைப்படமாக வெளியிடப்படும்.. படக்குழு அதிரடி

viduthalai

viduthalai OTT : வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை(viduthalai) திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் வாத்தியார் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.  ஜிவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்றுள்ளது.

பல நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஏப்ரல் 15ஆம் தேதி ஆன இன்று திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்த மிரட்டியுள்ளார். இவரின் நடிப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பிரமிக்க வைத்துள்ளது ஏனென்றால் காமெடி ஹீரோவாக நடித்த இவர் தற்பொழுது ஹீரோவாக மிரட்டி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் ott ரிலீஸ் நீடிக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது. அப்படி இருக்கும் வகையில் பிரபல இணையதளம் ஒன்றுக்கு இணை இயக்குனர் ஜெகதீச பாண்டியன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். வெற்றிமாறனின் படைப்பு இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளதால் OTT  வெளியிட்டு  பிளானை தயாரிப்பாளர்கள் எப்படி திட்டமிட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட விடுதலை திரைப்படம் 200வது எடிட் என்றும் வெற்றிமாறன் படத்தை எப்படி சிறப்பாக உருவாக்கினார் என்பதை அவர் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் ஓட்டிக்கு வெளியீட்டு வேலையை தொடங்கி விட்டதாகவும் போட்டியில் வெளியாகும் விடுதலை திரைப்படத்தில் சிறிய வித்தியாசம் இருக்கும் அது மட்டுமில்லாமல் பாடத்தில் கட் செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்கள்.

இதனலில் ஓடிடி பதிப்பு வெளியாகும் பொழுது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

viduthalai
viduthalai