கிடப்பில் இருக்கும் “விடுதலை படம்” – தண்ணி காட்டும் பிரபல நடிகர்.?

viduthalai
viduthalai

தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடைகின்றன. இதனால் ரசிகர்கள்  விஜய் சேதுபதி திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை.

படத்தில் மெயின் ரோலில் விஜய் சேதுபதி ஹீரோவாக காமெடி நடிகர் சூரி நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பித்திருந்தாலும் இதுவரை முடிந்த பாடு இல்லாமல் இருக்கிறது காரணம் மற்றவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டிருந்தாலும் விஜய்சேதுபதி கதாபாத்திரங்கள் இன்னும் எடுக்கப்படாமல் இருக்கிறதாம்.

முக்கால்வாசி படம் எடுத்து இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் எடுக்க வேண்டிய காட்சிகள் இருக்கிறதாம் ஆனால் விஜய் சேதுபதியும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோ வில்லனாக நடித்து வருவதால் அவர் கால்ஷீட் பிரச்சனையும் ஏற்பட்டு உள்ளது.

ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் எடுத்த இயக்குனர் விஜய் சேதுபதியை வைத்து இரட்டையர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறாராம். அதனால் விடுதலை படம் கிடப்பிலேயே கிடக்கிறது. விஜய் சேதுபதி இல்லாமல் வேறு வழியே என்ன பண்ணுவது என்று தெரியாமல் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுக்க உள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறனுக்கு இடையே  பிரச்சனைகள் இருக்கிறது அதனால்தான் அந்த படத்தை பாதிலேயே போட்டுவிட்டனர் என்ற செய்தியையும் தற்பொழுது வலம் வருகிறது.

ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். காமெடி நடிகர் சூரி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து இருக்கையில் அந்த படம் இன்னும் முடிந்தபாடில்லை இவர்கள் இருவரும் தண்ணி காட்டி வருவது அவருக்கு சற்று வருத்தத்தை கொடுக்கும்.