ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த “விடுதலை” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த தகவல்

viduthalai
viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் எப்பொழுதுமே உண்மை மற்றும் நாவல்களை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அதை பல படங்களில் நிரூபித்திருக்கிறார் இவர் கடைசியாக எடுத்த அசுரன் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சூரி, விஜய் சேதுபதியை வைத்து இவர் எடுத்த திரைப்படம் விடுதலை..

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் முழுக்க முழுக்க காவல் துறையின் அராஜக போக்கை கண்டித்து சாதாரண மக்கள் எப்படி ஒன்று கூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்பது தான் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல்..

சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூளை முடுக்கு எங்கும் விடுதலை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படத்தில் விஜய் சேதுபதி, சூரி உடன் இணைந்து  பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், ஆர் வேல்ராஜ், பிரகாஷ்ராஜ், சேத்தன், கௌதம் வாசுதேவன், கிஷோர் மற்றும் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்த அசத்தினார்.

தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி விடுதலை திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 6.5 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது படத்தின் கதை மற்றும் நடிப்பு சூப்பராக இருப்பதால்..

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அடுத்த நாள் அமோகமாக இருக்கிறது எனவே  அடுத்தடுத்த நாட்களில் வசூலும் குறையாது என கூறப்படுகிறது. நிச்சயம் விடுதலை திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..