வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை இந்த திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து பிரபல நடிகை தென்றல் ரகுநாதன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் இந்த பேட்டி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அந்த வகையில் தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார் அதேபோல் விஜய் சேதுபதி போராளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ ,சேர்த்தான், தென்றல் ரகுநாதன் என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையில் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் வெற்றிமாறன் இதன் முதல் பாகம் தற்போது வெளியாகி உள்ளது படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் படத்தில் மக்கள் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் கனிம வளங்கள் நிறைய இருக்கிறது என கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது ஆனால் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என மக்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள்.
போலீசாக இருக்கும் சூரி எப்படி மக்களுக்கு உதவி செய்கிறார் மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா இறுதியில் என்ன ஆனது என்பது படத்தின் கதை இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் இந்த திரைப்படத்திற்கு பிறகு காமெடி நடிகர் சூரி காமெடி வேடத்தில் நடிப்பாரா என கேள்வி எழும்பியுள்ளது அந்த அளவு ஹீரோவாக கலக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்தவர் தென்றல் ரகுநாதன் இவர் இந்த திரைப்படத்தில் ஆடையில்லாமல் நிர்வாண காட்சிகள் நடத்துள்ளார் இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது சமீபத்தில் தென்றல் ரகுநாதன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் செங்கல்பட்டு பகுதியில் நடந்தது ஒரு நாள் இரவு 7 மணி அளவில் நான் வெற்றிமாறன் சாரை சந்தித்தேன் பின் அவர் வந்து விடுங்கள் என்று சொன்னார் ஆனால் வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை.
முதலில் இந்த படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு என்ன கதாபாத்திரம் என்றே தெரியாது இயக்குனர் வெற்றிமாறன் படம் என்பதால் இது குறித்து நான் எதையும் கேட்கவில்லை படப்பிடிப்பு தளத்தில் தான் காவல் நிலைய காட்சியில் ஆடை இல்லாமல் நடிக்க வேண்டும் என கூறினார்கள் ஆனால் அப்படி நடிக்கும் பொழுது எனக்கு பயமோ தயக்கமோ எதுவும் ஏற்படவில்லை நான் அங்கு பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் படபிடிப்பில் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடிக்கவில்லை எடிட் செய்து தான் அது போல் திரையில் காண்பித்து இருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் என்ன கதாபாத்திரம் என்று தெரியாது இந்த திரைப்படத்தில் டப்பிங் பேசும் பொழுது தான் ஹீரோயினுக்கு அம்மாவாக நான் நடித்துள்ளேன் என்பது எனக்கு தெரியவந்தது என கூறியுள்ளார்.