சினிமா உலகில் எப்பொழுதுமே நாவல் மற்றும் உண்மை கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை நன்கு உணர்ந்து கொண்ட வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் தற்பொழுது கூட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் எடுத்துள்ள திரைப்படம் தான் விடுதலை.. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
முதல் பாகம் கடந்த மாதம் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விடுதலை படத்தின் கதை என்னவென்றால் போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை அப்பட்டமாக காட்டியுள்ளது. இதில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், வேல்ராஜ்..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர். கதை புதிது என்பதால் குழந்தைகள் தொடங்கி பெரிய வரை அனைவரையும் திரையரங்கு சென்று படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். அதன் காரணமாக விடுதலை படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
முதல் நாளில் மட்டுமே 6 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளிலும் வசூல் அதிகரித்தது தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விடுதலை படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்துதான் நாம் பார்க்க இருக்கிறோம் அதன்படி விடுதலை படத்தின் மூன்று நாள் வசூல் சுமார் 20 கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
வருகின்ற நாட்களிலும் விடுதலைப் படத்தின் வசூல் அதிகரிக்கும் தவிர குறைய சாத்தியமில்லை என பலரும் அடித்து சொல்லுகின்றனர் இதனால் விடுதலைப் படத்தின் வசூல் நிச்சயம் 100 கோடியை தாண்டி புதிய சாதனை படைக்கும் என படக்குழுவும் கணித்துள்ளது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீவு போல பரவி வருகிறார்கள்