விடுதலை 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த பட குழு.!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தை இயக்கினால் கண்டிப்பாக வெற்றி பெற்று தங்களுடைய இலக்கை அடைந்து விடலாம் என பல இயக்குனர்கள் கனவு கண்டார்கள். அப்படித்தான் பலரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்… அதனை சுக்குநூறாக உடைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தன்னுடைய இயக்கத்தில் காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் பாடல் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வழிநெடுக என்ற பாடல் இன்றும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள் தற்பொழுது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இரண்டாவது பாகம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை எனப் பட குழு அறிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள புதிய தகவல் என்னவென்றால் விடுதலை 2 திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்..