பத்து தல திரைப்படத்தின் வசூலை பந்தாடிய “விடுதலை”.. 2 நாளில் மட்டுமே இத்தனை கோடியா.? வாய்பிளக்கும் ரசிகர்கள்

viduthalai-
viduthalai-

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன் இவர் இதுவரை எடுத்த  அசுரன், ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இன்னொறு ஒரு வெற்றி படத்தை கொடுக்க   இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் திரைப்படம் எடுத்து உள்ளார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக படக்குழு திட்டமிட்டது அதன்படி முதல் பாகம் கடந்த மாதம்  31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் நடக்கும் பிரச்சனையை அப்பட்டமாக காட்டியிருந்தது. படத்தில் சூரி, விஜய்சேதுபதி உடன் கைகோர்த்து பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன்..

ராஜுமேனன், ஆர் வேல்ராஜ், பிரகாஷ் ராஜ், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர் விடுதலை   படத்தின் ஒவ்வொரு சீனும் சிறப்பாக இருந்ததால் எதிர்பார்த்ததை விட நன்றாகவே படம் ஓடியது இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

அதன் காரணமாக விடுதலை படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது முதல் நாளில் 6 கோடிக்கு மேல் வசூல் செய்த விடுதலை திரைப்படம் அடுத்த நாட்களில் பெரிய வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படி இரண்டாவது நாள் வசூல் நிலவரம் தற்பொழுது கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் விடுதலை திரைப்படம் இரண்டு நாள் முடிவில் மட்டும் சுமார் 13 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

முதல் நாளை விட சற்று வசூல் அதிகரித்துள்ளதால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது வருகின்ற நாட்களில் விடுதலை படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகின்றன. பத்து தல படத்தின் இரண்டு நாள் வசூல் 12 ,கோடிக்கு மேல் விடுதலை படத்தின் வசூல் 13 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடதக்கது.