இணையதளத்தில் லீக்கான விடுதலை 2 கிளைமேக்ஸ்… அடப்பாவிங்களா இப்படி மொத்த கதையையும் உளறிட்டீங்களே.?

viduthalai 2 climax scene
viduthalai 2 climax scene

viduthalai 2 climax : சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது இது முதல் பாகத்திலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் இரண்டாவது பாகத்தை மிகவும் விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் வெற்றிமாறன்.

பல இயக்குனர்கள் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என இருக்கிறார்கள் ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கதைக்கு ஏற்ற நடிகரை நடிக்க வைத்து வெற்றி கண்டு வருபவர் இவர் பல இயக்குனர்களுக்கு உதாரணமாக இருக்கக்கூடியவர் அப்படிதான் பரோட்டா சூரி அவர்களை கதாநாயகனாக வைத்து வெற்றி கண்டார்.

இந்த நிலையில் துணைவன் என்கின்ற நாவலை தழுவி விடுதலை என்ற திரைப்படத்தை உருவாக்கினார் வெற்றிமாறன், ஆனால் இந்த திரைப்படம் வெளியான பொழுது சோழகர் தொட்டி நாவல் கதையையும் அந்த படத்தில் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியது இந்த நிலையில் விடுதலை முதல் பாகத்தில் சூரி, ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக இருப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை இரண்டாவது பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்யும் பொறுப்பை சூரிக்கே வழங்கப்படும். ஆனால் முதல் பாகத்தின் இறுதியில் தன்னுடைய காதலியை போலீஸ் கொடுமைப்படுத்தி அடிப்பார்கள் அதில் இருந்து தனது காதலியை கொடுமையில் இருந்து காப்பாற்றவே விஜய் சேதுபதியை சூரி பிடித்துக் கொடுப்பார்.

ஆனால் அதன் பிறகு தான் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக இருந்ததும் அவரை பற்றி பல தகவல்களை சூரி தெரிந்து கொள்வார் அது மட்டும் இல்லாமல் மக்கள் படையை எதற்காக உருவாக்கினார் என்பதை சூரி அறிந்து கொண்டு அவரை பின்தொடர ஆரம்பிப்பார் இதனை முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலேயே காட்டி விட்டார்கள்.

இந்த நிலையில் விடுதலை இரண்டாவது பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பெருமாள் வாத்தியாரை சுட சூரிக்கு ஆர்டர் கொடுக்கப்படும் ஆனால் சூரி என்னால் முடியவே முடியாது என மறுத்து விடுவார் அதனால் சேத்தன் துப்பாக்கியை எடுத்து பெருமாள் வாத்தியாரை சுட்டுக்கொன்று விடுவார் அந்த கோபத்தில் சூரி சக போலீசாரை தாக்கி விட்டு காட்டுக்குள் சென்று விடுவார் அதன் பிறகு தலைமறைவாக பெருமாள் வாத்தியாராகவே சூரி மாறிவிடுவார் என விடுதலை 2 கிளைமாக்ஸ் இதுதான் என பலரும் கணித்து வருகிறார்கள்.

ஆனால் வெற்றிமாறனின் கிளைமாக்ஸ் காட்சியை யாராலும் கணிக்க முடியாது கண்டிப்பாக திறக்கதையில் ஏதாவது டூவிஸ்ட் வைத்திருப்பார் கிளைமாக்ஸ் காட்சி இதுவாக இருக்க வாய்ப்பே கிடையாது என வெற்றிமாறன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.