வானத்தில் மிதந்துகொண்டே ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ.! ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதம்மா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு பாராட்டையும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் சேதுபதி, விக்ரம், சிவகார்த்திகேயன் இன்னும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உள்ள பல நடிகைகள் மாலத்தீவு போவதை  வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அந்தவகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் முன்னணி நடிகை காஜல் அகர்வால் உட்பட பல நடிகைகள் மாலத்தீவு போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் புதிதாக தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

தற்பொழுது விடுமுறை என்பதால் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்றுள்ளார்.விமானத்தில் போய்க்கொண்டிருக்கும் போது வீடியோ ஒன்றை எடுத்து அதில் விமானத்தில் பறந்து மாலத்தீவு ரிசார்ட் தீவுகளின் கடற்கரையில் இருந்தது 30 நிமிடங்கள் பறந்தது சம சீன் அங்கிருந்த அனைத்தையும் காண்பது மிகப்பெரிய சந்தோஷம் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.