தீவிர சிகிச்சைக்கு பிறகாக நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

vikram-hospital
vikram-hospital

தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னை வறுத்துக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான் இவர் பிரபலமான நமது நடிகர் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக தன்னுடைய நடிப்பில் மட்டுமில்லாமல் உருவத்திலும் மாற்றம் செய்து கொள்வது வழக்கம் தான்.

அந்த வகையில் சேது, பிதாமகன், அன்னியன், ஐ  போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்த நமது நடிகர் சியான் விக்ரம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த வகையில் இவருக்கு மாரடைப்பு வந்ததாக வதந்திகள் வெளிவந்த நிலையில் அவருக்கு அதுபோன்ற பிரச்சனை கிடையாது என அவருடைய மகன் மற்றும் மேனேஜர் இருவரும் தெரிவித்திருந்தார்கள்.

மேலும் அவருக்கு லேசான நெஞ்சு வலி தான் மேலும் அவர் ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்தால் போதும் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என மருத்துவர் கூறி உள்ளதாக அவர்கள் தெரிவித்து இருந்தார்கள் இந்நிலையில் நேற்று சியான் விக்ரம் அவர்கள் பூர்ணமாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் ஆனதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெளிவந்த தகவலின் படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் இல்லாமல் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள். மேலும் விக்ரம் அவர்கள் தனக்காக வருத்தப்பட்ட பல்வேறு ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அவர் வெளியிட்ட வீடியோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் வெளியிட்ட வீடியோ கிடையாது என தற்பொழுது தகவல்கள் வெளிவந்த நிலையில் அவை கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்கெட்ச் திரைப்படத்தில் நடித்த பொழுது  அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடியதன் காரணமாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.