video on vijay master movie vathi comming song tune play by handless fan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், சமீபகாலமாக விஜயின் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது.
அதனாலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதுவும் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், இந்தப் பாடலுக்கு பல ரசிகர்கள் டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள், இந்தநிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் இந்தப் பாடலுக்கு டியூன் போட்டு உள்ளார்.
இந்த வீடியோவை அனிரூத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதிக அளவு ஷேர் செய்தும் வருகிறார்கள்.
#Anirudh #Master #Vijay pic.twitter.com/SRFRg9a3rw
— Tamil360Newz (@tamil360newz) May 9, 2020