தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இன்று விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்பதால் நயன்தாராவுடன் நான் எட்டாவது ஆண்டாக பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாரா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் குறிப்பாக துபாயில் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் முன் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்து இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் துபாயில் உள்ள வெட்ட வெளியான பகுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறியதாவது, நயன்தாராவுடன் நான் எட்டாவது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன்.
என் தங்கமே உனக்கு எனது நன்றி ஒவ்வொரு பிறந்தநாளையும் முந்தைய பிறந்த நாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய் ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்வது எப்படி என்பது உனக்கு தெரியும் அதை நீ தான் எனக்கும் கற்றில் தந்தாய் நீ என்னை நேசிக்கும் விதம் என மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு குழந்தை போல் நயன்தாரா துள்ளி குதிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் தற்பொழுது உள்ள இளம் காதல் ஜோடிகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருக்கும் இவர்களுடைய அன்பான இந்த வீடியோவிற்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.