துணிவு படத்தை விட இரண்டு மடங்கு புல்லட் தெறிக்கும்.. துப்பாக்கியுடன் ஒத்திகை பார்க்கும் கமலின் வீடியோ

Kamal
Kamal

Kamal : தற்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன் மாதிரியாக விளங்குபவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் கமல் கடைசியாக நடித்து, தயாரித்த விக்ரம் திரைப்படம் வெளிவந்து 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

முதலில்  கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். அடுத்து ஹச். வினோத் உடன் ஒரு படம், மணிரத்தினதுடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார் இதனால் அடுத்த மூன்று வருடங்களுக்கு பிஸியான ஹீரோவாக கமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பிசியான நேரிதிலும் கமல் சின்னத்திரை பிக் பாஸ் சீசன் 7 – யையும் தொகுத்து வழங்க திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு துப்பாக்கியை மீண்டும் கையில் எடுத்து இவர் பயிற்சி செய்துள்ளார்.

இதை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து GUTS & GUNS போட்டுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஹச். வினோத் நீங்களும் இணையும் படத்திற்கான வீடியோ தான் இது.

மறைமுகமாக சொல்ல வருவது எங்களுக்கு புரிகிறது துணிவு படம் போல இதுவும் மிகப் பெரிய ஒரு ஆக்சன் படமாக இருக்கும் போல..  இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இதோ உலக நாயகன் கமலஹாசன் துப்பாக்கி உடன் விளையாடும் அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.