தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2007ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் இவருக்கு விஜய் அவார்ட் பெஸ்ட் நடிகை விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் லாவண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர். மேலும் அஜீத்தின் மங்காத்தா திரை படத்தில் 2011ஆம் ஆண்டு நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்திலும் முருகன் தோழியாக நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஆண்ட்ரியா பெரும்பாலும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்துவந்தார் அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியாகிய விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, இங்கே என்ன சொல்லுது லண்டன் ரிட்ஜ், அரண்மனை, பூஜை, ஆம்பள என பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கமலுடன் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
மேலும் விஸ்வரூபம் 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஆண்ட்ரியா ஒரு காலகட்டத்தில் நல்ல கதை மற்றும் நடிகைக்கான கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் தரமணி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் தற்பொழுது இவர் அரண்மனை மூன்றாவது பாகத்திலும், நோ என்றி வட்டம், மாளிகை, கா என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிசாசு இரண்டாவது பாகத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் சில திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்துகொண்டு டூ பீஸ் உடையில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.